Sunday, 16 December 2012

சென்னைப்பட்டினம்  எங்கள்  செல்லப்பட்டினம் 

பட்டினமாம்  பட்டினமாம் 
பட்டாளம் அதிரும் பட்டினமாம் 

தெருக்கூத்தும்  பொம்மலாட்டமும் 
வாழ்ந்து வளர்ந்த பட்டினமாம் 

ப (பா)ரதமும்  தெம்மாங்கும் 
சிறகடிக்கும்  பட்டினமாம் 

ஈசனும் அல்லாவும் 
கைகோர்த்த  பட்டினமாம் 

இயேசுவையும்  புத்தரையும் 
வரவேற்ற  பட்டினமாம் 

பாமரனும் படிக்க விரும்பும் 
பட்டினம் எங்கள் பட்டினமாம் 

பட்டினியை வந்தோருக்கு  
பசிநீக்கிய  பட்டினமாம் 

தமிழகத்தின்  தேம்ஸ்  ஆக 
கூவம் ஓடிய பட்டினமாம் 

இருவரிக்கவிஞனும் 
வாழ்ந்து மாண்ட பட்டினமாம் 

எழில் கொஞ்சும் வங்கக்கரை 
விரிந்து கிடக்கும்  பட்டினமாம் 

தமிழகத்தின் தலைபபிள்ளயாம் 
அதுவும் எங்கள்  பட்டினமாம்....

 பட்டினமாம் எங்கள்  பட்டினமாம் 
அதுவே எங்கள் 
மதரசப்  பட்டினமாம் 


Saturday, 15 December 2012

ஒரு ஏழையின் கனவு...

அவன் தூக்கத்திலும் தெரியவில்லை,
கண்ணின் ஏக்கத்திலும் தெரியவில்லை....

அவன் மூச்சிலும் தெரியவில்லை,
வாய்பேச்சிலும்  தெரியவில்லை...

அவன் வியர்வை துளியும்  -
சொல்ல மறந்ததை,
நினைவூட்டியது  ஓர்  மழைத்துளி ...

அவன் கூரை விரிசல் வழி...!

தெரிந்தது ...புரிந்தது...
அந்த ஏழையின் கனவு...!

அவனது அன்றைய கனவு...!


மழை...!!

மாசினால் சீரழிந்த,
மேகத்தின் கண்ணீர் துளிகள்....


வெட்கம்
நிலவுக்கென்ன ஒரு நாள் வெட்கம்...?
அம்மாவாசையன்று மட்டும்
மறைகிறதே..!!!!

வறுமை
கூரையின்
விரிசல் வழி தெரிவது,
நிலவல்ல.
ஏழையின் வறுமை...!!!

நன்றி...
உன்னை கண்டதும்,
என் நெஞ்சில் ஓராயிரம் கனவுகள்!
நீ...
அன்பினை ஊட்டும்  அன்னையா?
இல்லை,
பண்பினை ஊட்டும் தந்தையா?
குருவே...
நன்றி...உனக்கு...நன்றி !!!

மழலை...
 "காலை மொட்டவிழ்ந்த,
மௌவளின் முனகல்..!!!"
  
"பூமிக்கு வந்த
புது மலருடன், 
கலைமகள் ஆடும் 
கண்ணாமூச்சி ஆட்டம்...!!!"

இறைவன்!
 கோவிலின் வெளியே,
 காலணி வகைகள்...!!
காலணி கடையில்,
இறைவன் படங்கள்...!!
உலகை வியந்தேன்...
இறைவனை உணர்ந்தேன்...!!

காதல்...
கருவறையிலிருந்து,
 கல்லறைக்கு செல்லும் வழியில்,
 இரு கரங்கள் மறு கருவறையானது ....
காதல் எனும்
 மூன்றெழுத்தால்...!!