Sunday, 16 December 2012

சென்னைப்பட்டினம்  எங்கள்  செல்லப்பட்டினம் 

பட்டினமாம்  பட்டினமாம் 
பட்டாளம் அதிரும் பட்டினமாம் 

தெருக்கூத்தும்  பொம்மலாட்டமும் 
வாழ்ந்து வளர்ந்த பட்டினமாம் 

ப (பா)ரதமும்  தெம்மாங்கும் 
சிறகடிக்கும்  பட்டினமாம் 

ஈசனும் அல்லாவும் 
கைகோர்த்த  பட்டினமாம் 

இயேசுவையும்  புத்தரையும் 
வரவேற்ற  பட்டினமாம் 

பாமரனும் படிக்க விரும்பும் 
பட்டினம் எங்கள் பட்டினமாம் 

பட்டினியை வந்தோருக்கு  
பசிநீக்கிய  பட்டினமாம் 

தமிழகத்தின்  தேம்ஸ்  ஆக 
கூவம் ஓடிய பட்டினமாம் 

இருவரிக்கவிஞனும் 
வாழ்ந்து மாண்ட பட்டினமாம் 

எழில் கொஞ்சும் வங்கக்கரை 
விரிந்து கிடக்கும்  பட்டினமாம் 

தமிழகத்தின் தலைபபிள்ளயாம் 
அதுவும் எங்கள்  பட்டினமாம்....

 பட்டினமாம் எங்கள்  பட்டினமாம் 
அதுவே எங்கள் 
மதரசப்  பட்டினமாம் 


No comments:

Post a Comment